2025 மே 19, திங்கட்கிழமை

மாந்தை மேற்கில் உதவித் திட்டங்கள் வழங்கி வைப்பு

Editorial   / 2019 டிசெம்பர் 30 , பி.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

தனி ஒருவராக குடும்பத்தை தலைமைத்துவம் கொண்டவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும்  விசேட நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஒரு தொகுதியினருக்கு, இன்று (30) காலை, பல்வேறு உதவித் திட்டங்கள் வழங்கப்பட்டன.

ஆரம்ப கைத்தொழில், சமூக வலுவூட்டல் அமைச்சின் அங்கவீனமுற்றோருக்கான செயலகத்தின் நிதி ஒதுக்கீட்டில், இந்த உதவித் திட்டங்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வு, மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் எஸ்.கேதீஸ்வரன் தலைமையில், பிரதேசச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெபற்றது.

இதன்போது கணவனை இழந்த, காணாமல் ஆக்கப்பட்டோரின் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சியை ஊக்கப்படுத்தவும் உதவித் திட்டங்கள் வழங்கப்பட்டன.

அத்துடன், மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் தெரிவுசெய்யப்பட்ட 130 பாடசாலை மாணவர்களுக்கு, பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

மேலும், தெரிவுசெய்யப்பட்ட 14 விசேட  தேவையுடையவர்களுக்கு சுய தொழில் முயற்சிக்கான காசோலைகளும் வழங்கப்பட்டன.

அத்துடன், பெண்களை தலைமைத்துவமாகக் கொண்ட 35 பெண்களுக்கு வாழ்வாதார உதவிகளும் வழங்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X