Editorial / 2017 நவம்பர் 07 , பி.ப. 05:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.என்.நிபோஜன்
“கிளிநொச்சி மாவட்த்தில், தற்போது என்றுமில்லாத அளவு வறுமைக்கு மக்கள் முகம் கொடுத்துள்ளனர். வறுமையை எதிர்கொள்ள முடியாத அளவுக்குப் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் மேம்பாட்டுக்கு, அதிகாரத் தரப்பினர்களிடம் எவ்வித மாற்றுத் திட்டங்களும் இல்லை” என, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், சமத்துவம், சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டாளருமான மு. சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
மேலும், “யுத்தத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்கள், விவசாயம், மீன்பிடி என்பவற்றை அடிப்படையாக கொண்டவையாகும். இதனை அடிப்படையாகக் கொண்டு, பிரதேச ரீதியாக தொழில் வாய்ப்புகளை வழங்க கூடிய வகையில் தொழில் மையங்களை உருவாக்க வேண்டும். இதன் மூலம், இளம் சமூகத்தின் வேலையில்லாப் பிரச்சினைகளை ஓரளவுக்கேனும் தீர்க்க முடியும்” எனவும் குறிப்பிட்டார்
பச்சிலைப்பள்ளி - இத்தாவில் பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
3 hours ago
7 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
7 hours ago
8 hours ago