Editorial / 2022 மார்ச் 02 , பி.ப. 05:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
க.அகரன்
டீசல் தடுப்பாட்டு மற்றும் மின்சாரத் தடையால் வவுனியா மாவட்டத்தை சேர்ந்த அரிசி ஆலை உரிமையாளர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
குறிப்பாக தற்போது பெரும்போக நெல் அறுவடைக்காலமாக இருப்பதால் வவுனியா உட்பட வன்னி மாவட்டத்தில் அறுவடை செய்யப்படும் நெல் வவுனியாவில் அமைந்துள்ள அரிசி ஆலைகளால் கொள்வனவுசெய்யப்படுகின்றது.
அதேவேளை நாட்டில் டீசல் தட்டுப்பாடு ஏற்ப்பட்டுள்ளதுடன், அதனால் மின்சாரமும் தடைப்பட்டுள்ளது. இந்நிலையில், நெல்லை பதப்படுத்தும் இயந்திரங்கள் செயலிழந்து போயுள்ளன.
இதனால் அறுவடை செய்யப்பட்டு கொள்வனவு செய்யப்படும் நெல்மூடைகள் ஆலைகளில் தேங்கும் நிலைமை ஏற்ப்பட்டுள்ளதுடன், விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனவு செய்வதற்கும் அரிசி ஆலை உரிமையாளர்கள் தயக்கம் காட்டிவருகின்றனர்.
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago