2025 மே 06, செவ்வாய்க்கிழமை

’மீனவர்கள் சிலர் தொடர்ந்தும் இந்திய மீனவர்களுடன் தொடர்பு’

Niroshini   / 2021 மே 31 , பி.ப. 01:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் - பேசாலை, தலைமன்னார் ஆகிய பகுதிகளில் உள்ள மீனவர்களுடன் இணைந்து கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற சிலர், இந்திய மீனவர்களுடன் தொடர்ந்தும் தொடர்புகளை மேற்கொண்டு வருகின்றதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என, மன்னார் மாவட்டப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.

மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில், இன்று (31) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், இவ்விடயம் தொடர்பில் குறித்த கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மிகவும் விழிர்ப்புடன் இருக்க வேண்டுமென்றார்.

இந்தியாவில் இருந்து பொருட்கள் மற்றும் மனிதக் கடத்தலில் ஈடுபடுபவர்கள் தொடர்பாக தகவல்கள் தெரிந்தால் பொலிஸார், கடற்படையினர் அல்லது சுகாதார திணைக்களத்தினருக்கு அது தொடர்பில் தகவல்களை வழங்குமாறும் அவ்வாறு வழங்கப்படும் தகவல்கள் இரகசியம் பேணப்பமென்றும், அவர் கூறினார்.  

அத்துடன், 'மன்னார் மாவட்டத்தில் அபாயம் கூடிய வகுப்பினர் என அடையாளம் காணப்படும் கிராம சேவையாளர் பிரிவுகளில் வசிக்கின்றவர்களுக்கு வெகு விரைவில் தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளது. முதற்கட்டமாக 3500 தடுப்பூசிகளை வழங்குமாறு தொற்றுநோய் விஞ்ஞானவியல் பிரிவிடம் கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது. ஒரு சில வாரங்களில் குறித்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்' என்றும், வினோதன் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X