2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

மீனவர் மீது கடற்படையினர் தாக்குதல்

Editorial   / 2020 செப்டெம்பர் 29 , பி.ப. 12:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு - கள்ளப்பாடு பகுதியிலிருந்து, நேற்று  (28) இரவு கடற்றொழிலுக்குச் சென்ற மீனவர் மீது, கடங்படையினரின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

கள்ளப்பாடு பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய மீனவரே, இவ்வாறு தாக்குதலுக்கு இலக்கானவர் ஆவார்.

குறித்த மீனவர், முல்லைத்தீவு கடலில், கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளையில், அக்கடல் பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த கடற்படையினர், அவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதில் காயமடைந்த மீனவர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில், முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .