2025 மே 09, வெள்ளிக்கிழமை

முட்டை வாங்கச் சென்ற பெண்ணை காணவில்லை

Niroshini   / 2021 ஜூலை 06 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

ஒருவர் காணாமல் போயுள்ளதாக, வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

22 வயதான கண்ணன் வினித்தா என்ற பெண்ணே, இவ்வாறு காணாமல் போயுள்ளதாக, அவரது தாயாரால், நேற்று  (05), பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த பெண், ஞாயிற்றுக்கிழமை (04) மாலை 6 மணியளவில், தனது அம்மாவின் வீட்டிலிருந்து  அருகில் உள்ள கடைக்கு, முட்டை வாங்கி வருவதற்காகச் சென்ற நிலையில் காணாமல் போயுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பெண் திருமணம் முடித்து, ஐந்து வருடங்களாக கணவருடன் வாழ்ந்து வந்த நிலையில், சில நாள்களாக கணவரைப் பிரிந்து தாயாருடன் வாழ்ந்து வருவதாக, அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண் தொடர்பில் தகவல் அறிந்தோர், வவுனியா பொலிஸாருக்கோ அல்லது 076-5462984 எனும் அலைபேசி இலக்கத்துக்கோ தொடர்பு கொண்டு தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X