Niroshini / 2021 ஓகஸ்ட் 19 , பி.ப. 01:25 - 0 - {{hitsCtrl.values.hits}}

-மு.தமிழ்ச்செல்வன்
கிளிநொச்சி - அக்கராயன்குளம் பகுதியில் இலுந்து யாழ்ப்பாணத்துக்கு இன்று (19) அதிகாலை, முதிரை மரக்குற்றிகளை கடத்தி செல்ல முற்பட்ட ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவரிடம் இருந்து, 11 முதிரை மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
அக்கராயன் பகுதியிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு கப் ரக வாகனத்தில் சட்டவிரோதமாக வெட்டப்பட்ட முதிரை மரக்குற்றிகள் கடத்தப்படவுள்ளதாக அக்கராயன்குளம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, பொலிஸார் மேறக்கொண்ட நடவடிக்கையின் போதே, சந்தேக நபர், முதிரை மரக் குற்றிகளுடன் கைதுசெய்யப்பட்டார்.
சந்தேக நபரை, கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
13 minute ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
1 hours ago
3 hours ago