Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 செப்டெம்பர் 13 , பி.ப. 01:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் 150ஆவது ஆண்டு பூர்த்தி நிகழ்வையொட்டி, பாடசாலையின் சாதனை பயன விசேட தபால் தலை வெளியீட்டு நிகழ்வு, சிறுவர் மாணவர் தலைவர்களுக்கான தினமும் பாடசாலை அதிபர் அருட்சகோதரர் ரொஜினோல்ட் தலைமையில் நேற்று பாடசாலையில் நடைபெற்றது
மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு 150 வருட பூர்தியை முன்னிட்டு பாடசாலை சமூகம் மற்றும் பாடசாலை பழைய மாணவர்கள் சார்பாக பல்வேறு பட்ட கலாச்சார மற்றும் சமூக நலன் சார்ந்த பல்வேறு செயற்பாடுகள் இடம் பெற்று வருகின்றன.
அந்த வகையில் 150 ஆண்டு சாதனை பயணத்தின் தேசிய அங்கிகாரத்துக்கு என விசேட தபால் தலையானது, இலங்கை தபால் திணைக்கள முத்திரை விநியோக பணிப்பாளர் மீஹம மற்றும் தபால் திணைக்கள பிரசார பிரிவு அதிகாரி கே.கே.ஜே.பெரேரா முன்னிலையில் வெளியீட்டு வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில், பிரதம விருந்தினராக மன்னார் மறை மாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்டனி விக்டர் சோசை அடிகளார், சிறப்பு விருந்தினர்களாக மன்னார் வலய கல்விபணிப்பாளர் பிறட்லி, மன்னார் டிலாசால் சபை இயக்குநர் அருட்சகோதரர் ஸ்ரனிஸ்லாஸ், மன்னார் பிரதம தபால் அதிபர் அந்தோனிப்பிள்ளை சகாயசீலன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
மன்னார் மாவட்ட ரீதியில் வெளியீட்டு வைக்கப்படும் முதல் தபால் தலை இது என்பதும் குறிப்பிடதக்கது.
50 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago