Editorial / 2018 ஏப்ரல் 03 , பி.ப. 03:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எஸ்.என்.நிபோஜன், சுப்பிரமணியம் பாஸ்கரன்

முன்னாள் ஜனாதிபதியும் தேசிய நல்லிணக்க செயலகத்தின் தலைவியுமான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க இன்று (03) கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டு பல்வேறு அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைத்துள்ளார்.
தேசிய நல்லிணக்க செயலகத்தின் நிதி உதவியின் கீழ் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திப் பணிகளையே அவர் ஆரம்பித்து வைத்துள்ளார்.
பளை பிரதேசத்தில் பளை இந்து ஆரம்ப பாடசாலை ஒன்றின் வகுப்பறை கட்டிடத்தைத் திறந்து வைத்து பின்னர், கிளிநொச்சி கரைச்சி பிரதேசத்தில் கரைச்சி தெற்கு பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்திற்கு 5 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட உணவு பதனிடல் நிலையத்தை திறந்து வைத்துள்ளதோடு, வடக்கச்சி மற்றும் முழங்காவில் பிரதேசத்தில் தேசிய நல்லிணக்கத்தின் செயலகத்தின் நிதியுதவியில் அமைக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்களையும் மக்களின் பாவனைக்கு திறந்து வைத்துள்ளார்.
21 Dec 2025
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Dec 2025
21 Dec 2025