Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 டிசெம்பர் 11 , பி.ப. 05:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி நகரத்தை நிலைபேறான இரண்டாம் தர உயர்நிலை நகரமாக அபிவிருத்திச் செய்யும் நோக்குடன், கரைச்சி பிரதேச சபையால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுகள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
உலக வங்கியின் நிதியுதவியுடன், சுமார் 1,300 மில்லியன் ரூபாய் செலவில் முன்னெடுக்கப்படவுள்ள உட்கட்டுமானப் பணிகளை, நேரடியாகக் கள ஆய்வு மேற்கொள்வதற்காக, குறித்த திட்டத்தின் பணிப்பாளர் காமினி விஜயவர்த்தன தலைமையிலான குழுவினர், கரைச்சி பிரதேச சபையின் தவிசாளருடன் நேற்று (11) கலந்துரையாடினர்.
இதன்போது, கரைச்சி பிரதேச சபையால் முன்மொழியப்பட்ட நகராக்கத்துக்கான திட்ட வடிவங்களையும் முன்மொழிவுகளையும், நேரில் பார்வையிட்டு இறுதி செய்தனர்.
இந்தத் திட்டமிடலின் மூலம், கிளிநொச்சியில் 200 மில்லியன் ரூபாய் செலவில் நகர மண்டபமும் பொதுச் சந்தையில் 280 மில்லியன் ரூபாய் செலவில் வர்த்தகக் கட்டடத் தொகுதியும், கரடிப்போக்குச் சந்தியில் 60 மில்லியன் ரூபாய் செலவில் கடைத்தொகுதியும் அச்சகமும், 280 மில்லியன் ரூபாய் செலவில் பசுமைப் பூங்காவில் சிறுவர்களுக்கான நீச்சல் தடாகமும், 350 மில்லியன் ரூபாய் செலவில் நகர வீதிகளும், 90 மில்லியன் ரூபாய் செலவில் வடிகாலமைப்புகளும், 100 மில்லியன் ரூபாய் செலவில் கழிவுமுகாமைத்துவப் பொறிமுறைகளும் வாகனங்களும், 100 மில்லியன் ரூபாய் செலவில் பொது நூலகமும் ஆனையிறவில் சகல வசதிகளுடன் கூடிய பொது மலசலகூடமும் அமையவுள்ளன.
இதற்கான பூர்வாங்கப்பணிகள் அனைத்தும், 2020ஆம் ஆண்டு பூர்த்திசெய்யப்பட்டவுடன், அடுத்துவரும் 03 ஆண்டுகளில் இத்திட்டங்களுக்கான நிர்மாணப் பணிகள் அனைத்தும் நிறைவுசெய்யப்படுமென்று, கரைச்சி பிரதேச சபைத் தவிசாளர் அ.வேழமாலிகிதன் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .