Editorial / 2019 செப்டெம்பர் 12 , பி.ப. 01:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கீதாஞ்சன்
முல்லைத்தீவு மாவட்டத்தில், நேற்று (11) இரவு பெய்த மழை, கடும் காற்று காரணமாக, நான்கு வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக, முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, உடையார்கட்டுப் பகுதியில், 2 வீடுகளும் 1 கொட்டகையும் ஒட்டுசுடுட்டான் பிரதேசத்தில், 1 வீடும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
இதேவேளை, உடையார்கட்டு பகுதியில், மின்னல் தாக்கம் காரணமாக, சில வீடுகளில் உள்ள இலத்திரனியல் பொருள்களும் சேதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
20 Apr 2026
20 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 Apr 2026
20 Apr 2026