2025 நவம்பர் 11, செவ்வாய்க்கிழமை

’முல்லைத்தீவில் டெல்டா அபாயம் இல்லை’

Niroshini   / 2021 ஓகஸ்ட் 01 , பி.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-விஜயரத்தினம் சரவணன்

டெல்டா வைரஸ் தொற்றுக்களோடு முல்லைத்தீவு மாவட்டத்தில் இதுவரை எவரும் இனங்காணப்படவில்லை என, முல்லைத்தீவு மாவட்ட தொற்றுநோய் கட்டுப்பாட்டு வைத்திய அதிகாரி வி.வஜிதரன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், முல்லைத்தீவைச் சேர்த ஒருவர் ஓமான் நாட்டிலிருந்து நாட்டுக்குத் திரும்பிய நிலையில், அவருக்கு டெல்டா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவர் தனிமைப்படுத்தல் நிலையத்தில் உள்ளதாகவும் அவரால் முல்லைத்தீவில் சமூகத்தொற்று இடம்பெறவில்லை எனவும் கூறினார்.

எனவே,  டெல்டா தொற்றுத் தொடர்பில் முல்லைத்தீவு மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும், அவர் தெரிவித்தார்.

இதேவேளை, கொவிட் தடுப்பூசி தொடர்பில் சில மக்களிடையே தவறான கருத்துகள் நிலவுகின்றன எனத் தெரிவித்த அவர்,  தடுப்பூசி ஏற்றும் விடயத்திலே பொதுமக்கள் பயம்கொள்ளத் தேவையில்லை என்றும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X