Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 22, வியாழக்கிழமை
Editorial / 2019 ஜூன் 07 , பி.ப. 12:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் “நாட்டுக்காக ஒன்றிணைவோம்” எனும் தேசிய வேலைத்திட்டத்துக்காக, இதுவரையில் சுமார் 229 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக, முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.
ஜூன் 3ஆம் திகதி தொடக்கம் நேற்று (06) வரையிலான நான்கு தினங்களில் சுமார் 941 வேலைத்திட்டங்கள் பூர்த்தியடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
குறித்த வேலைத்திட்டங்கள் ஊடாக 54 ஆயிரத்து 685 பேர் நன்மை அடைந்திருப்பதாகவும் முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் தெரிவித்தார்.
நான்காவது நாளான நேற்று (06) 262 வேலைத்திட்டங்கள் பூர்த்தியடைந்துள்ளன.
இதற்காக சுமார் 137 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. 14 ஆயிரத்துக்கும் அதிகமானோர் நன்மையடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
1 hours ago
1 hours ago