2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

முல்லைத்தீவில் நான்கு விவசாயிகள் கைது

Niroshini   / 2020 ஒக்டோபர் 12 , பி.ப. 12:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

முல்லைத்தீவு – வெலிஓயா, ஜனகபுரம் கிராம பகுதியில், மட்டுப்படுத்தப்பட்ட பறவைகள் சரணாலயத்தில், பெரும்போக விதைப்பு மேற்கொள்வதற்கு சென்ற 4 விவசாயிகள், நேற்று  (11) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள், கொக்குத்தொடுவாய், முல்லைத்தீவு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.

1956ஆம் ஆண்டில், பறவைகள் சரணாலயத்துக்கு உட்படுத்துவதாக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்ட பகுதியில் அதாவது, சரணாலயத்தின் எல்லைக்குட்பட்ட 200 ஏக்கரில், முல்லைத்தீவு குடியிருப்பாளர்கள் சிலர் கடந்த இரண்டு ஆண்டுகளாக விவசாய செய்கைக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வந்திருந்தனர்.

இந்நிலையில், பல வகையான பூர்வீக மற்றும் கவர்ச்சியான பறவைகள் சரணாலயத்தை அழிப்பது பெரும் சோகம் என்றும், மகாவலி மேம்பாட்டு ஆணையம் மற்றும் வனத்துறைக்கு சொந்தமான காடுகளில் விவசாயிகள் விவசாயத்தை மேற்கொண்டு வருவதாகவும், அப்பகுதி கிராம மக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவல் அடுத்து, நேற்று  ஸ்தலத்துக்கு விரைந்த  வெலிஓயா பொலிஸார், 4 விவசாயிகளைக் கைதுசெய்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .