2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

’முல்லைத்தீவில் 5,000 ஏக்கருக்கு உரம் வேண்டும்’

Niroshini   / 2021 ஜூன் 16 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார், சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு மாவட்டத்தில், 5,000 ஏக்கருக்குரிய உரம் தேவைப்படுவதாக, முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் க.விமலநாதன் தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், முல்லைத்தீவு மாவட்டத்தில், சிறுபோக பயிர்ச் செய்கையில் விவசாயிகள் தற்போது ஈடுபட்டு வருகின்றனர் எனவுத் தெரிவித்தார்.

மாவட்டத்தில் உள்ள 10 கமநல சேவை நிலையங்கள் ஊடாக விவசாயிகளுக்கு உரங்கள் விநியோகிக்கப்பட்ட நிலையில், பயணக் கட்டுப்பாடு காரணமாக, கமநல சேவை நிலையங்களுக்கு உரங்கள் வரவில்லை எனத் தெரிவித்த அவர், இதன் காரணமாக, தற்போது பயிர்ச் செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு உரங்களை வழங்குவதில் நெருக்கடி எதிர்கொள்ளப்படுவதாகவும் கூறினார்.

கொழும்பில், யூரியா பசளைக்கான தட்டுப்பாடு நிலவுவதாக அறிய முடிவதாகத் தெரிவித்த மாவட்டச் செயலாளர், குமுழமுனை கமநல சேவை நிலையத்தின் ஊடாகத்தான் கூடுதலான பசளை விவசாயிகளுக்கு விநியோகிக்க வேண்டி உள்ளதெனவும் பசளையை மாவட்டத்துக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகளில்தான் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றோம் எனவும் தெரிவித்தார்.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .