2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

’முல்லைத்தீவில் 6,000 ஏக்கரில் நிலக்கடலைச் செய்கை’

Editorial   / 2020 ஜனவரி 26 , பி.ப. 12:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு மாவட்டத்தில், ஆண்டுதோறும் 6,000 ஏக்கரில் நிலக்கடலைச் செய்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக, முல்லைத்தீவு மாவட்டப் பிரதி விவசாயப் பணிப்பாளர் பூ.உகநாதன் தெரிவித்தார்.

இது குறித்துத் தொடர்ந்துரைத்த அவர், பெரும்போகத்தில் 3,200 ஏக்கரிலும் சிறுபோகத்தில் 2,000 ஏக்கரிலும் இடைபோகத்தில் 1,000 ஏக்கரிலும் நிலக்கடலைச் செய்கைப் பண்ணப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

உப உணவுப் பயிர்ச் செய்கைகளான கௌபி, பயறு, எள்ளு, நிலக்கடலை என்பவற்றில் விவசாயிகள் கூடுதலாக ஈடுபட வேண்டுமென வலியுறுத்திய அவர், விவசாயத் திணைக்களத்தால் நடமாடும் விதை விற்பனை செய்வதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவெனவும் கூறினார்.

இதற்கமைய, மல்லாவி விவசாயப் பயிற்சி நிலையத்திலும் புதுக்குடியிருப்பு விவசாயப் போதனாசிரியர் அலுவலகத்திலும் ஒட்டுசுட்டான் மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்திலும் இந்த நல்லின விதைகளை பெற்றுக் கொள்ள முடியுமெனவும், அவர் தெரிவித்தார்.

இதேவேளை, மாவட்டத்தில், குரங்குகளின் தொல்லைகளைக் கட்டுப்படுத்துவதற்கு பத்து வாயு துப்பாக்கிகளை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .