2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

முல்லைத்தீவு கடலில் அத்துமீறல் அதிகரிப்பு

Princiya Dixci   / 2020 டிசெம்பர் 10 , பி.ப. 08:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

சண்முகம் தவசீலன், விஜயரத்தினம் சரவணன்

முல்லைத்தீவு கடலில் அண்மைய நாட்களாக இந்திய றோலர்களின் அத்துமீறிய செயலால் தாம் பல்வேறு பாதிப்புக்களுக்கு உள்ளாகி வருவதாகவும் இதனைக் கட்டுப்படுத்துவதற்கு கடற்படை எந்தவிதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை எனவும் உள்ளூர் மீனவர்கள் விசனம் தெரிவித்தனர். 

முல்லைத்தீவு கடலை நம்பி வாழும் சுமார் 5,000 மீனவக் குடும்பங்கள் பல்வேறு துன்பங்களுக்கு மத்தியில் வாழ்வாதாரத்துக்கு போராடிவரும் நிலையில், தற்போது இறால் சீசன் ஆரம்பிக்கும் நிலையில், அவற்றை இந்தியன் இழுவைப் படகுகள் அழித்து வருவதாகவும் மீனவர்கள் தெரிவித்தனர். 

இதனைத் தடுத்து நிறுத்துமாறு மீன்பிடித் துறை அமைச்சர் உள்ளிட்ட அனைவருக்கும் தெரியப்படுத்தியும் எவ்விதமான நடவடிக்கையும் இதுவரையும் எடுக்கப்படவில்லை என மீனவர்கள் கவலை வெளியிட்டனர்.

தொடர்ந்தும் நடவடிக்கை எடுக்கத் தவறும் பட்சத்தில், இம்மாதம் 15ஆம் திகதி முதல் போராட்டத்தில் குதிக்கப்போவதாகவும் மீனவர்கள் தெரிவித்தனர்.

நேற்று (09) மாலை வேளையிலும் பல றோலர் படகுகள், முல்லைத்தீவு கடற்கரையை அண்டிய பகுதியில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதும்  கடற்படை அவர்களை விரட்ட நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் மீனவர்கள் குற்றஞ்சாட்டினர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .