2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

‘முல்லைத்தீவு களவிஜயம் தொடர்பில் பொதுவான அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளோம்’

சண்முகம் தவசீலன்   / 2018 ஏப்ரல் 11 , பி.ப. 02:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

“முல்லைத்தீவில் அவதானிக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்து, நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடி பொதுவான அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளோம்” என வடமாகாண விவசாய அமைச்சர் க.சிவனேசன் தெரிவித்துள்ளார்.

வடமாகாண சபை உறுப்பினர்கள் நேற்று (10) முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெறும் சிங்கள குடியேற்றங்கள் உள்ளிட்ட மக்களது வாழ்வியல் பிரச்சனைகள் தொடர்பில் ஆராய களவிஜயம் ஒன்றை மேற்கொண்டதோடு மாவட்ட செயலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடாத்தி ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கான மகஜர் ஒன்றையும் கையளித்தனர்


இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வடமாகாண விவசாய அமைச்சர் க.சிவனேசன்,


“வடமாகாண சபையில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாக வடமாகாண சபை அமைச்சர்கள் உறுப்பினர்கள் வெலிஓயா மற்றும் கொக்கிளாய் பிரதேசங்களுக்கு சென்று அங்கு தமிழர்களின் நில ஆக்கிரமிப்பு மற்றும் கடல் பிரதேசத்தில் அத்துமீறிய சட்டவிரோதமான மீன்பிடி விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்துள்ளனர்.


தமிழர்களின் சொந்த வாழிடங்கள் மற்றும் மணலாற்று பகுதியில் தமிழ் மக்களின் தாய் நில பிரதேசங்கள் பல இன்று பேரினவாத சக்திகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.


இதில் சில குளங்கள் கூட ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. குளங்களை அவர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்கள். இந்த விடயங்கள் தொடர்பில் மாவட்ட செயலரை சந்தித்து மகஜர் ஒன்றினை கையளித்துள்ளோம். இங்கு அவதானிக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் தொடர்ந்து வரும் மாகாண சபையின் அமர்வுகளில் கலந்துரையாடவுள்ளோம்.


இதற்காக முதலில் ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்து, குறித்த பிரச்சினை தொடர்பில் ஆராய்ந்து, அதன்பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்து ஒரு கூட்டத்தை நடத்தவுள்ளோம். இதன் பின்னர் ஒரு பொதுவான அறிக்கையினை மாகாண சபைக்கு சமர்ப்பிக்கவுள்ளோம்” என தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X