2025 மே 17, சனிக்கிழமை

முல்லைத்தீவு மத்திய பஸ் நிலையம் திறப்பு

Editorial   / 2020 ஜூன் 08 , பி.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

 

முல்லைத்தீவ மாவட்டத்தில், நகர அபிவிருத்தி நீர் வழங்கல் மற்றும் வீடமைப்பு வசதிகள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் நகர அபிவிருத்தி அதிகார சபையின் அனுசரணையுடன் அமைக்கப்பட்ட முல்லைத்தீவு மத்திய பஸ் நிலையம் இன்று (08) மக்கள் பாவனைக்காக திறந்துவைக்கப்பட்டுள்ளது.

கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் க.தவராசா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வடமாகாண நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் எஸ்.கே.திஸாநாயக்க, கிழக்க மாகாண நகர அபிவிருத்தி திட்டமிடல் பணிப்பாளர் கெமுன பிரெமரத்தின, கரைதுறைப்பற்று பிரதே செயலாளர் உமைமகள், முல்லைத்தீவு பிரந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் த.தயாளன், வடமாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை தலைவர் எஸ்.அமிர்தலிங்கம் உள்ளிட்டப் பலர் கலந்துகொண்டனர்.

முல்லைத்தீவு மத்திய ​பஸ் நிலையம் மக்கள் பாவனைக்காகத் திறந்து வைக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து நினைவுக்கல்லும் திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டது.

தொடர்ந்து மத்திய பஸ் நிலையம், நகர அபிவிருத்தி அதிகார சபையினரால் கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் க.தவராஸாவிடம் கையளிக்கப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்டச் செயலாளரால், பஸ் நிலையம் திறந்து வைக்கப்படுமென அறிவிக்கப்பட்ட போதும், அவர் நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை.

இதேவேளை, இந்த நிகழ்வில், இலங்கை போக்குவரத்து சபையின் முல்லைத்தீவு சாலை ஊழியர்கள், அதிகாரிகள் கலந்துகொண்டிருந்த போதும், தனியார் பஸ்களோ அதன் உரிமையாளர்களோ வருகை தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .