Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை
Freelancer / 2022 செப்டெம்பர் 29 , மு.ப. 09:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் வாய், முகம் மற்றும் தாடை சம்மந்தமான சிகிச்சை நடவடிக்கைகள் சத்திர சிகிச்சை நிபுணர்களினால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் சில சிகிச்சைகளுக்காக நோயாளர்கள் வெளி மாவட்டங்களான யாழ்ப்பாணம், வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு வரும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 27.09.2022 அன்று சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் அகிலன் தலைமையிலான குழுவினரால் புற்று நோயால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளிக்கு ஆறு மணி நேர முயற்சியின் பலனால் அறுவைச்சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் முதல் முதலாக இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (R)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago