Niroshini / 2021 ஒக்டோபர் 07 , பி.ப. 03:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ. கீதாஞ்சன்
முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் இரத்த வங்கியில், இரத்த கையிருப்பு தீர்ந்து போகின்ற அபாய கட்டத்தை எதிர்நோக்கியுள்ளதாக, கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் சி.லோகேஸ்வரன் தெரிவித்தார்.
வெளிச்சம் அமைப்பினரின் ஏற்பாட்டில், முல்லைத்தீவு - மாஞ்சோலை வைத்தியசாலையில், நேற்று (06) நடைபெற்ற மாபெரும் இரத்ததான முகாமில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் இரத்த வங்கியில் உள்ள குருதி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையில், அப்பகுதி இளைஞர்கள் இரத்த தானம் செய்துள்ளனர்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர், 2009ஆம் ஆண்டுக்குப் பின்னரான சூழ்நிலையில், இரத்ததானம் வழங்குவது தொடர்பில் இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு அல்லது அச்ச நிலை காணப்படுகின்றது என்றார்.
இது முற்றிலும் தவறான அச்சநிலை எனத் தெரிவித்த அவர், ஒருவர் இரத்தத்தை தானமாக வழங்கினால், அது புதிய இரத்த உற்பத்திக்கு வழிவகுக்கும் எனவும் கூறினார்.
இரத்தம் வழங்குவது உடல் ரீதியாகவோ அல்லது மருத்துவ ரீதியாகவோ தீங்கற்ற செயற்பாடு என்பதனை இளைய சமூகம் புரிந்து கொண்டு, இளைஞர்கள் இரத்த தானம் வழங்க முன்வரவேண்டும் எனவும், லோகேஸ்வரன் தெரிவித்தார்.
34 minute ago
40 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
40 minute ago
49 minute ago