2025 மே 08, வியாழக்கிழமை

முல்லை விவசாயிகளுக்கு விழிப்புணர்வு பிரசாரம்

Niroshini   / 2021 ஓகஸ்ட் 17 , பி.ப. 01:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-விஜயரத்தினம் சரவணன்

முல்லைத்தீவு மாவட்ட விவசாயிகளுக்கு சேதனப் பசளை உற்பத்தியை ஊக்குவிப்பது தொடர்பிலான விழிப்புணர்வு பிரசாரம், இன்று (17) மேற்கொள்ளப்பட்டது.

வடமாகாண விவசாயத் திணைக்களம் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட விவசாயத் திணைக்களம் ஆகியன இணைந்து, இந்த பிரசார நடவடிக்கைகளை  முன்னெடுத்துள்ளன.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட உடுப்புக்குளம், அளம்பில், கொக்குத்தொடுவாய், கொக்கிளாய் உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த விவசாயிகளுக்கு சேதனப்பசளை ஊக்குவிப்புத் தொடர்பிலான விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டன.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X