Niroshini / 2021 ஜூலை 04 , பி.ப. 12:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
முல்லைத்தீவின் தீர்த்தக்கரை, சிலாவத்தை ஆகிய பகுதிகளில் இருந்து வரிகளை செலுத்துபவர்கள் முள்ளியவளை பிரதேச சபையின் உப பணிமனைக்குச் சென்று வருவதாகத் தெரிவித்த கரைதுறைபற்று பிரதேச சபை உறுப்பினர் திருமதி இமக்குலேற்ரா புஸ்பானந்தன், இதனால், அவர்கள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர் என்றும் கூறினார்.
இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், தீர்த்தக்கரை, சிலாவத்தை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் முள்ளியவளைக்குச் செல்லாமல், முல்லைத்தீவு நகரில் உள்ள கரைதுறைபற்று பிரதேச சபையின் தலைமையகத்தில் வரிகளை செலுத்தலாமென்றார்.
கொரோனா காரணமாக முள்ளியவளைக்குச் சென்று வருவதில்; நெருக்கடிகள் இருப்பதாக, தீர்த்தக்கரை, சிலாவத்தை பகுதி மக்கள் தன்னிடம் தொடர்ச்சியாக முறைப்பாடு செய்து வருகின்றனரென்றும், அவர் கூறினார்.
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago