2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

முள்ளிவாய்க்காலில் சுடரேற்றி வவுனியாவை நோக்கி பொத்துவில் பேரணி

Shanmugan Murugavel   / 2021 பெப்ரவரி 05 , பி.ப. 07:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

- செ. கீதாஞ்சன்

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரையான பேரணி இன்று நண்பகல் திருகோணமலையிலிருந்து புல்மோட்டை வெலிஓயா ஊடாக பல்வேறு தடைகளைத் தாண்டி முல்லைத்தீவு மாவட்டத்தினை சென்றடைந்தது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் வெலிஓயா சந்தியில் இருந்து அரசியல்வாதிகளால் வரவேற்கப்பட்ட பேரணி வாகனத் தொடர் மத ஆக்கிரமிப்பின் சின்னமாக காணப்படும் நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொண்டு கவனயீர்ப்பு நடத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து வடக்கு கிழக்கு சிவில் சமூக அமைப்புக்கள் உடுப்புக்குளம் சந்தி பகுதியில் பேரணியினை வரவேற்று கவனயீர்ப்பை நடத்தி அதில் இருந்து வாகனத் தொடரணி முல்லைத்தீவு நகரிலுள்ள புனித இராஜப்பர் தேவாலய முன்றலில் இருந்து  முல்லைத்தீவு நகரைச் சென்றடைந்து மாவட்ட செயலகம் முன் கவனயீர்ப்பினை முன்னெடுத்து அதனை தொடர்ந்து வட்டுவாகல் பாலத்தில் இருந்து கவனயீர்ப்பு பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இறுதிப் போரின் போது மக்கள் படையினரிடம் சரணடைந்ததும் பெற்றோர்கள் பிள்ளைகள் உறவுகளை படையினரிடம் ஒப்படைத்ததன் நினைவாக வட்டுவாகல் பாலம் ஊடாக கவனயீர்ப்பு பேரணி நகர்ந்து தொடர்ந்து வாகன பேரணியாக முள்ளிவாய்க்கால் முற்றத்தினை சென்றடைந்துள்ளார்கள்.

இறுதிப் போரின் போது பல்லாயிரக்கணக்கான மக்களை காவுகொண்ட முள்ளிவாய்க்கால் பகுதியில் போரில் உயிரிழந்தவர்கள் நினைவாக அமைக்கப்பட்ட நினைவு முற்றத்தில் ஒன்று கூடு அகவணக்கம் செலுத்து சுடர் ஏற்றி வணக்கம் செலுத்தியதை தொடர்ந்து மதிய உணவு எடுத்து சிறுதி நேரம் ஓய்வெடுத்த பின்னர் புதுக்குடியிருப்பு,ஒட்டுசுட்டான் நெடுங்கேணி ஊடாக வவுனியா நோக்கி கவனயீர்ப்பு பேரணி புறப்பட்டுசென்றுள்ளது.

இந்த பேரணிக்குஆதரவாக மக்கள் வீதிகளில் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளதுடன் வடக்குகிழக்கு மாவட்டங்களை சேர்ந்த சிவில் சமூக அமைப்புக்கள் மக்கள் பிரதிநிதிகள் என பெருமளவானர்கள் கலந்துகொண்டு  தங்கள் உணர்வுகளை முள்ளியவாய்க்கால் முற்றத்தில் வெளிப்படுத்தியுள்ளார்கள்

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .