2025 மே 23, வெள்ளிக்கிழமை

முள்ளிவாய்க்காலில் தேசிய போதை ஒழிப்பு வார கவனயீர்ப்பு நடவடிக்க

Editorial   / 2019 ஜூன் 26 , பி.ப. 03:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

- செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் மேற்கில் தேசிய போதை ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு ஆர்ப்பாட்டம் ஒன்று நேற்று  முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் மேற்கு விடியல் சனசமூகத்தினரால் குறித்த விழிப்புணர்வு ஆர்ப்பாட்டம்; முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சிந்தனையில் தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரம் நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதன் ஒரு அங்கமாகவே முள்ளிவாய்க்கால் மேற்கு மக்களால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் 'ஏற்றத்தாழ்வு பார்க்காத போதை மது' 'மதி மயக்கிட துடிக்கும் மதுவை ஒழி' 'மதியை போக்கும் மதுவே போ போ' 'போதை அற்ற தேசத்தை உருவாக்குவோம்'; போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X