2025 செப்டெம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை

முள்ளிவாய்க்காலில் புதையல் தோண்டியவர்கள் கைது

Freelancer   / 2023 பெப்ரவரி 05 , பி.ப. 09:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ. கீதாஞ்சன்

முள்ளிவாய்க்கால் பகுதியில் வௌ்ளிக்கிழமை (03) மாலை கனரக இயந்திரம் கொண்டு புதையல் தோண்ட முற்பட்ட வேளை, இராணுவத்தினர் கொடுத்த தகவலுக்கு அமைய முல்லைத்தீவு பொலிஸாரால் எட்டுப் பேர் கைது செய்யப்பட்டதுடன் காரும் கனரக இயந்திரமும் கைப்பற்றப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்களில் இருவர் முள்ளியவளையைச் சேர்ந்தவர்கள் எனவும் ஏனைய ஆறு பேரும் அநுராதபுரத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களையும் சான்றுப் பொருட்களையும் சனிக்கிழமை (04) முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, அவர்களை தலா ஐந்து இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீர பிணையில் விடுவிக்கப்பட்டனர். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .