Freelancer / 2022 மார்ச் 03 , பி.ப. 01:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் பகுதியில் நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த கைக்குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
முள்ளிவாய்க்கால் கிழக்கு சனசமூக மண்டபத்திற்கு அருகாமையில் நேற்று காணியை சுத்தம் செய்து கொண்டிருந்த பொதுமகன் ஒருவர் இதை கண்டுபிடித்து முல்லைத்தீவு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
குறித்த பகுதிக்குச் சென்ற முல்லைத்தீவு பொலிசார் அங்கு ஆய்வு பணியினை மேற்கொண்டபோது 176 கைக்குண்டுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
மேலும், குறித்த பகுதிக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அகழ்வு பணிகளை முன்னெடுப்பதற்கு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றின் உத்தரவு பெறும் நடவடிக்கையில் முல்லைத்தீவு பொலிஸார் ஈடுபட்டுள்ளார்கள். (R)

3 hours ago
9 hours ago
27 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
9 hours ago
27 Jan 2026