2025 மே 08, வியாழக்கிழமை

மூன்று கோடி ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு

Niroshini   / 2021 ஓகஸ்ட் 11 , பி.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

கல்பிட்டி பகுதிக்கு கொண்டு செல்ல முயற்சித்த 131 கிலோ 725 கிராம், கேரள கஞ்சா பொதிகள்  நேற்று (10) கைப்பற்றப்பட்டுள்ளன.

மன்னார் இலுப்பைக்கடவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கூராய் பகுதியில் கேரள கஞ்சா கடத்தல் இடம்பெறுவதாக  கடற்படை புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், மன்னார் மாவட்ட குற்ற புலனாய்வு  பிரிவினரால் இவை கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன் போது, சந்தேகத்தின் பேரில் கல்பிட்டி பகுதியை சேர்ந்த இருவர் கைதுசெய்யப்பட்டனர். 

கைப்பற்றபட்ட கேரள கஞ்சா மூன்று கோடியே ஐம்பது இலட்சம் ரூபாய் க்கும் அதிகம் என கணிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X