2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மூன்று பிள்ளைகளை பிரசவித்த குடும்பத்துக்கு உதவித்தொகை

Editorial   / 2020 பெப்ரவரி 03 , பி.ப. 12:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

கடந்த ஆட்சிக்காலத்தில் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவால் இரட்டை குழந்தைகளை கொண்ட குடும்பங்களுக்கான நிதி உதவி வழங்கிவைக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் இரண்டு குழந்தைகளை ஒரே பிரசவத்தில் பிரசவித்தால் பத்து இலட்சம் ரூபாயும் மூன்று பிள்ளைகளை பிரசவித்தால் இருபது இலட்சமும், நான்கு பிள்ளைகளை பிரசவித்தால் இருபத்தி ஐந்து இலட்சமும் வழங்கவுள்ளதாக, அறிவிக்கப்பட்டு கடந்த ஆண்டின் இறுதியில் வழங்கிவைக்கப்பட்டது.

இதன் அடிப்படையில், முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த குடும்பம் ஒன்று  ஒரே பிரசவத்தில் மூன்று பிள்ளைகளை பிரசவித்து அரசாங்கத்தின் இருபது இலட்சம் ரூபாய் உதவியைப் பெற்றுக்கொண்டுள்ளது.

விசுவமடு - 12ஆம் கட்டை பகுதியில் வசித்து வரும் குடும்ப ஒன்றுக்கு 2006ஆம் ஆண்டு முதல் பிரசவமும் 2011ஆம் ஆண்டு அடுத்த பிரசவத்தையும் 2017 ஸ்ரீஆம் ஆண்டு 06ஆம் மாதம் 21ஆம் திகதி ஒரோ பிரசவத்தில் மூன்று பிள்ளைகளைப் பெற்றெடுத்துள்ளார்கள். 

இவர்களை பிரசவிப்பதில்  பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு தற்போது வளர்ந்து வருகின்றார்கள். இந்நிலையில் ஜனாதிபதியின் ஒரே சூலில் மூன்று குழந்தைகள் பிறந்தால் உதவித்தொகை வழங்குவதாக அறிவித்துள்ளமையினை பத்திரிகையில் பார்த்து நண்பர் ஊடாகவும் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராஜாவிடம் தெரியப்படுத்தி அவர் ஊடாக வடமாகாண ஆளுநருக்கு தெரியப்படுத்தியதற்கு அமைவாக, 15.11.19அன்று கொழும்பில் எங்களை அழைத்து மூன்று பிள்ளைகளுக்குமாக இருபது இலட்சம் ரூபாய் பணம் வங்கியில் வைப்பில் இட்டுள்ளார்கள்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .