Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2022 மார்ச் 01 , மு.ப. 02:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
க. அகரன்
வவுனியா நகரப்பகுதியில் நிலத்தை ஆய்வு செய்யப் பயன்படும் ஸ்கேனர் இயந்திரத்தை உடமையில் வைத்திருந்த மேல் மாகாணத்தைச் சேர்ந்த 5 பேர் வவுனியாவில் வைத்து விசேட அதிரடிப்படையினரால், நேற்று (28) கைது செய்யப்பட்டனர்.
இந்த கைது சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா - மடுகந்தை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வவுனியா மரக்கறிச்சந்தை பகுதியில் வைத்து கெப் வாகனம் ஒன்று சோதனையிடப்பட்டது.
இதன்போது குறித்த வாகனத்தில் நிலத்தை ஆய்வு செய்வதற்கு பயன்படும் ஸ்கேனர் இயந்திரம் ஒன்று கொண்டு செல்லப்படுகின்றமை கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து வாகனத்தில் பயணித்தவர்களை கைது செய்த விசேட அதிரடிப்படையினர் அவர்களை வவுனியா பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
இதில், பியகமவைச் சேர்ந்த 4 பேரும், பிலியந்தலயைச் சேர்ந்த ஒருவருமாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்ததுடன், மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
15 minute ago
22 minute ago
35 minute ago