2025 மே 05, திங்கட்கிழமை

’மேலுமொரு சிகிச்சை நிலையத்தை அமைக்க ஏற்பாடு’

Niroshini   / 2021 மே 27 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

இன்னும் 400 கட்டில்கள் போடக் கூடிய வகையில்  மேலும் ஒரு சிகிச்சை நிலையத்தை; ஒழுங்குப்படுத்திக் கொண்டு இருப்பதாகத் தெரிவித்த மன்னார் மாவட்டச் செயலாளர்; திருமதி ஏ.ஸ்ரான்லி டி மெல், இன்னும் இரண்டு வாரங்களில் அந்தப்; புதிய சிகிச்சை நிலையத்தையும் செயற்படுத்தப்பட கூடியதாக இருக்குமென்றும் கூறினார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், மன்னார் மாவட்டத்தில், தற்போது பெண்களுக்கான கொரோனா சிகிச்சை நிலையம் ஆரம்பிக்கப்பட்டு, சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும் இந்நிலையில், மேலும் 400 கட்டில்கள் போடக்கூடிய வகையில் கொரோனா சிகிச்சை நிலையமொன்றை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் சுகாதார துறையினருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாவும் தெரிவித்தார்.

அத்தியாவசிய பொருட்கள், அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதில் மக்களுக்கு எந்தவித பிரச்சினையும் ஏற்படவில்லையெனத் தெரிவித்த அவர்,  ஒவ்வொரு கிராமங்களிலும்  நடமாடும் சேவையின் மூலம் மக்களுக்கான அத்தியாவசிய சேவைகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளதாகவும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X