2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

மின்சார வசதியை பெற்றுத்தருமாறு கோரிக்கை

Princiya Dixci   / 2015 நவம்பர் 01 , பி.ப. 12:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்
 
முல்லைத்தீவு, மாந்தை கிழக்கு கரும்புள்ளியான் கிராமத்துக்கான மின்சார வசதியை பெற்றுத்தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள கரும்புள்ளியான் கிராமத்தில் தற்போது 168 வரையான குடும்பங்கள் வாழ்ந்து வரும் நிலையில் இக்கிராமத்துக்கான மின்சார வசதிகள் இல்லாத நிலை காணப்படுகின்றது.
 
யுத்தம் காரணமாக கடந்த 2007ஆம் ஆண்டு இப்பகுதி மக்கள் முற்றாக இடம்பெயர்ந்து முள்ளிவாய்க்கால் வரை சென்று செட்டிகுளம், மெனிக்பாம் நலன்புரி நிலையத்தில் இருந்து கடந்த 2009ஆம் ஆண்டு மீள்குடியமர்வுக்காக அனுமதிக்கப்பட்ட பகுதியாக மாந்தை கிழக்கு பிரதேசம் காணப்பட்டது.
 
கடந்த 2009 ஆம் ஆண்டு இக்கிராம மக்கள் மீள்குடியேறிய போதும் கடந்த ஆறு ஆண்டுகளாக இக்கிராமத்துக்கான மின்சார விநியோகம் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. இதனால் தாங்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர்.

இக்கிராமத்துக்கான பிரதான மின் இணைப்பு வேலைகள் மேற்கொள்ளப்பட்டு 11 மாதங்கள் கடந்துள்ள போதும் வீடுகளுக்கான இணைப்புக்கள் இதுவரை வழங்கப்படவில்லை.
 
தமக்கான மின்னிணைப்பை பெற்றுத்தருமாறு இக்கிராம மக்கள் பல தடவைகள் உரிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தபோதும் இதுவரை எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை எனவும் தமக்கான மின்சாரத்தை பெற்றுத்தருமாறு இப்பகுதி மக்கள் கோரிக்;கை விடுத்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .