2025 ஜூலை 05, சனிக்கிழமை

முன்னாள் போராளிகளான தம்பதி கைது

Princiya Dixci   / 2016 ஜூலை 06 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளிகளான முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் சிவநகர் பிரதேசத்தைச் சேர்ந்த தம்பதி கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம், நேற்று செவ்வாய்க்கிழமை (05) இரவு 7.30க்கு இடம்பெற்றுள்ளது.

பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுப் பொலிஸாரினால் இவர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

திருகோணமலை மாவட்டத்தை சேர்ந்த கேதீஸ்வரனும் அவரது மனைவியான வட்டக்கச்சியைச் சேர்ந்த சாவித்திரி ஆகியோரே ஒட்டுசுட்டான், சிவநகர்ப் பகுதியில் வசித்து வந்த நிலையில் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கேதீஸ்வரனை ஒட்டுசுட்டான் நகர்ப் பகுதியில் வைத்துக் கைதுசெய்யப்பட்டுள்ள அதேவேளை, மனைவியை வீட்டில் வைத்துக் கைதுசெய்யப்பட்டதாக அயலவர்கள் தெரிவித்தனர்.

இந்தக் கைதுக்கான காரணம் இதுவரைத் தெரியவரவில்லை. எனினும், முன்னாள் போராளி கேதீஸ்வரனின் அலைபேசியில் சர்ச்சைக்குரிய காணொளி இருந்ததாலேயே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .