2025 ஜூலை 07, திங்கட்கிழமை

முன்னாள் போராளிகள் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை

George   / 2016 செப்டெம்பர் 29 , மு.ப. 08:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.அகரன், ரொமேஸ் மதுசங்க

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் நான்கு பேர், வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வை நிறைவு செய்து நேற்று வியாழக்கிழமை சமூகமயமாக்கப்பட்டனர்.

பூந்தோட்டம் புனர்வாழவு நிலையததில் இடம்பெற்ற இந்நிகழ்வில் புனர்வாழ்வு நிலையத்தின் பணிப்பாளர் கேணல் எம்.ஏ. ஆர். கமிடோன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு புனர்வாழ்வு காலத்தை நிறைவு செய்தவர்களை குடும்பத்துடன் இணைத்தார்.

இதேவேளை, புனர்வாழ்வு நிலையத்தினை சேர்ந்த பயிலுனர்கள் மற்றும் அந நிலையததில் பணியாற்றும் இராணுவ வீரர்களின் கலை நிகழ்வுகளும் இதன்போது இடம்பெற்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .