Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Gavitha / 2016 ஒக்டோபர் 15 , மு.ப. 08:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடராசா கிருஸ்ணகுமார்
விடுதலைப்புலிகள் இருந்திருந்தால், முள்ளம் தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்ல கௌரவம் அளிக்கப்பட்டிருக்கும். மாற்றுவலுவுடையோருக்கு விடுதலைப்புலிகள் அளித்த கௌரவத்தை நாமும் அளிக்க வேண்டும்' என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்தார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான நடமாடும் சேவை வெள்ளிக்கிழமை (14) இடம்பெற்றது. இதில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
'நல்லதொரு காரியத்தை வடக்கு மாகாண சுகாதார அமைச்சு செய்கின்றது. உண்மையில் இவர்கள் பல எதிர்பார்ப்புக்களுடன் தங்கள் வாழ்வை நகர்த்தி கொண்டு இருக்கிறார்கள். இவர்களுக்கு எங்களுடைய சுகாதார அமைச்சு இவ்வாறான வேலைத்திட்டங்களை செய்வது வரவேற்க வேண்டிய விடயமாகும்.
விடுதலைப்புலிகள் இருந்திருந்தால், முள்ளம் தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்ல கௌரவம் அளிக்கப்பட்டு இருக்கும். இருந்தும் வடக்கு மாகாண சுகாதார அமைச்சு இவர்களுக்கான சேவையை தன்னால் முடிந்தளவு செய்கின்றது. எனவே, இவ்வாறான விடயங்கள் வரவேற்கவேண்டிய விடயமாகும்' என்றும் அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
47 minute ago
1 hours ago
3 hours ago