2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

‘யாரிடமும் ஆட்சேபனை கிடைக்கவில்லை’

Editorial   / 2020 ஜனவரி 23 , பி.ப. 02:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன்

அயலிலுள்ள கட்டடங்களுக்கு விதிக்கப்பட்ட அதே அளவீட்டு நடைமுறையே, குறித்த நபரின் ஆதனங்களின் வரி மதிப்பட்டிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்த விலை மதிப்பீட்டு திணைக்களம், இதுவரை அயலில் உள்ளவர்களிடம் இருந்து எதுவித ஆட்சேபனையும் கிடைக்கவில்லையெனவும் கூறியது.

இது குறித்துத் தொடர்ந்துரைத்த விலை மதிப்பீட்டு திணைக்களம், டயலொக் கோபுரத்தின் வரி மதிப்பீடானது, குறித்த நபருக்கும் அந்நிறுவனத்துக்கும் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் அந்நிறுவனத்திடம் இருந்தே அறவிடப்பட வேண்டுமெனவும் கூறியது.

வருட 10 சதவீத அறவீடானது, பிரதேச சபையால் தீர்மானிக்கப்பட்டு அறவிடப்படுகின்றதெனத் தெரிவித்த திணைக்களம், மேற்குறிய விடயங்களை கருத்தில் கொண்டு பார்க்கும் போது, குறித்த ஆதனங்களுக்கான மதிப்பீடானது சாதாரண முறையிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளதெனவும் கூறியது.

ஆகவே, பெறுமதிகளில் எவ்வித மாற்றமும் இல்லையெனவும், விலை மதிப்பீட்டு திணைக்களம் கூறியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .