2025 மே 20, செவ்வாய்க்கிழமை

‘யாருக்கு வாக்களித்தாலும் எந்தப் பயனும் கிட்டாது’

Editorial   / 2019 ஒக்டோபர் 10 , பி.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

யாருக்கு வாக்களித்தாலும் எந்தப் பயனும் கிடைக்கப்போவதில்லையெனத் தெரிவித்த வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் தலையிட்டு, தமக்கான நீதியைப் பெற்றுத்தர வேண்டுமெனவும் கோரினார்கள்.

வடக்கில், கடத்தல், காணாமல் ஆக்கப்படுதல் என்பன தொடர்வதாகத் தெரிவித்து, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால், நேற்று (09) மாலை கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா - ஏ9 வீதியில், வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு முன்னால் 963 நாள்களாக சுழற்சி முறையில் போராடி வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளே, இவ்வாறு தமது போராட்ட தளத்துக்கு முன்னால் இந்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இதன்போது ஊடகங்களுக்குக் கருத்துரைத்த போதே, அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர்கள், குழந்தை பிறந்து 14 நாள்களேயான நிலையில், சாப்பாடு வாங்குவதற்காக சென்ற காராத்தே பயிற்றிவிப்பாளரான தனுஷன் திங்கட்கிழமை (07) கடத்தப்பட்டுள்ளதாகவும். எல்லா அரசாங்கமும் மாறி மாறி கடத்தலை செய்வதாகவும் சாடினர்.

தமிழ் மக்களுக்கு தீர்வை தர அவர்கள் தயாராகவில்லையெனத் தெரிவித்த உறவினர்கள், காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு பதில் இல்லையெனவும் கூறினர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X