Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஓகஸ்ட் 29 , பி.ப. 01:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன், மு.தமிழ்ச்செல்வன்
யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்கான வீட்டுத்திட்டத்தை, இந்தியா கட்டி கொடுத்தால் என்ன, சீனா கட்டி கொடுத்தால் என்ன, யப்பான் வந்து கட்டி கொடுத்தால் என்ன? எங்களுக்குத் தேவையெல்லாம், வீடுகள் நிர்மாணிக்கப்பட வேண்டும் என்பதேயாகுமென, மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார்.
கிளிநொச்சிக்கு இன்று (29) விஜயம் மேற்கொண்ட அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது குறித்து தொடர்ந்துக் கருத்துரைத்த அவர், தமது அமைச்சு தொடர்பில், அண்மைக் காலமாக முன்வைக்கப்படும் பல்வேறு விமர்சனங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தவே, இந்த ஊடகவியலாளர் சந்திப்பை ஏற்பாடு செய்ததாகத் தெரிவித்த அமைச்சர், கடந்த 3 ஆண்டுகளில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில், தனது அமைச்சால் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள், படையினரிடமிருந்து விடுவிக்கப்பட்ட காணிகளின் அளவு, மற்றும் மீள்குடியேற்ற அமைச்சின் கீழ் முன்னெடுக்கப்பட்டச் செயற்பாடுகள் தொடர்பில், தனித்தனியே விளக்கமளித்தார்.
11 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
1 hours ago
1 hours ago