2025 மே 13, செவ்வாய்க்கிழமை

ரயில்களில் மோதுண்டு இருவர் பலி

Niroshini   / 2020 ஒக்டோபர் 08 , பி.ப. 02:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட், சுப்பிரமணியம் பாஸ்கரன், மு.தமிழ்ச்செல்வன்    

 

மன்னார் - சௌத்பார் ரயில் நிலையத்துக்கு அருகில், இன்று (08) அதிகாலை 4 மணியளவில், ரயிலுடன் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொழும்பில் இருந்து மன்னார் நோக்கி வந்த ரயிலில் மோதுண்டே, குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபர் சுமார் 45 வயது மதிக்கத்தக்கவரெனத் தெரிவித்த பொலிஸார், சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லையெனவும் கூறினர்.

சடலம் மீட்கப்பட்டு மன்னார் பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அண்மித்த பகுதியில், இன்று (08) காலை, ரயிலுடன் மோதி  45 வயது மதிக்கத்தக்க ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொழும்பில் இருந்து யாழ். நோக்கி பயணித்த ரயிலுடன் மோதுண்டே குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபரின் சடலத்தை ரயில் ஊழியர்கள் கிளிநொச்சி ரயில் நிலையத்தில் ஒப்படைத்ததை அடுத்து, விசாரணையின் பின்னர் பொலிஸாரால் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு சடலம் அனுப்பப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர், இதுவரை அடையாளம் காணப்படவில்லை.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X