Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 23, வெள்ளிக்கிழமை
க. அகரன் / 2019 ஜூன் 26 , பி.ப. 12:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரச நியமனங்களில் போது கடைப்பிடிக்கப்படும் அடிப்படை தகுதியில் மாற்றங்களை ஏற்படுத்தி எமக்கான நிரந்தர நியமனங்களை வழங்க தீர்வு ஒன்றினை பெற்றுத்தர வேண்டும் என வடக்கு கிழக்கு ரயில் கடவை காப்பாளர் ஒன்றியத்தின் தலைவர் றொகான் ராஜ்குமார் தெரிவித்தார்.
வவுனியா ரயில் கடவை காப்பாளர்கள் நிரந்தர நியமனம் கோரி ஊடக சந்திப்பொன்று நேற்று வவுனியா ஊடக அமையத்தில் இடம்பெற்றது. இதன் போது ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்
மேலும் கருத்து தெரிவிக்கையில்,
கடந்த ஐந்து ஆண்டு காலமாக எங்களது நிரந்தர நியமனம் தொடர்பாக பலதரப்பட்ட வகையிலும் எங்களது முயற்சியை மேற்கொண்டு வருகின்றோம். நாள் ஒன்றுக்கு 250 ரூபா சம்பளம் என்ற அடிப்படையில் ரயில் கடவைகளில் எமது கடமைகளை நேர்த்தியாக செய்து வருகின்றோம்.
நாட்டில் இருக்கின்ற பிரஜைகளின் பாதுகாப்பு தொடர்பாக அர்ப்பணிப்புடன் ஐந்து தொடக்கம் ஏழு ஆண்டுகள் எமது சேவையை செய்து வருகின்றோம்.
தற்போது ரயில் திணைக்களத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களின் தனிப்பட்ட சிபாரிசில் பல ஊழியர்கள் இணைத்துக் கொள்ளப்படுகின்றார்கள். முன்பு போக்குவரத்து அமைச்சராக இருந்த நிமால் சிறீபால டி சில்வா காலத்திலும் 1200 ஊழியர்கள் புதிதாக இணைக்கப்பட்டுள்ளனர். இருந்த போதும் அதில் எங்களுடைய ஊழியர்கள் உள்வாங்கப்படவில்லை.
தற்போதுள்ள போக்குவரத்து துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தலைமையில் ரயில் திணைக்களத்திற்கு பல்வேறு வெற்றிடங்களிற்கு புதிய ஊழியர்கள் இணைத்துக் கொள்ளப்படுகின்றனர். மேலும் இதுவரை காலமும் எமது எதிர்காலம் தொடர்பாக எதுவித திட்டமிடலோ அல்லது எமக்கான நிரந்தர தீர்வோ எட்டப்படவில்லை.
வடக்கு கிழக்கில் 450 ஊழியர்களும் அகில இலங்கை ரீதியில் 2368 பேர் ரயில் திணைக்களங்களில் உள்ள கடவை காப்பாளராக இணைக்கப்பட்டுள்ளனர். இதில் பலர் அங்கவினமுற்றவர்களாகவும், பலர் வயது முதிர்ந்தவர்களாக இருக்கின்றனர். அத்தோடு வடக்கு கிழக்கில் 150 பேர் மாத்திரமே அரச தொழில் பெறுவதற்கான தகுதி உடையவர்களாக காணப்படுகின்றனர். மேலும் நாடு முழுவதிலும் சுமார் 1000 பேர் மாத்திரமே அரச தொழில் பெறுவதில் தகுதியுடையவர்களாக இருக்கின்றனர்.
எமது சேவையை கருத்திற் கொண்டு அரச நியமனங்களில் போது கடைப்பிடிக்கப்படும் அடிப்படை தகுதியில் மாற்றங்களை ஏற்படுத்தி எமக்கான நிரந்தர தீர்வு ஒன்றினை பெற்றுத்தர வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறி சேனவுக்கு எழுத்து மூலமாக அறிவித்திருக்கிறோம். அதே போன்று கார்தினல் மல்கம் ஆண்டகை, போக்குவரத்து அமைச்சர் அர்ஜுண ரணதுங்க, எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்சவிற்கும் எமது பிரச்சனைகளை எழுத்து மூலமாக தெரிவித்துள்ளோம் என தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago