Editorial / 2020 செப்டெம்பர் 28 , பி.ப. 12:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
யாழில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற ரயில் மீது, நேற்று (27) இரவு, இனந்தெரியாதோரால் கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பெலியத்த பகுதியில் உள்ள வடக்கு - கிழக்கு ஆஸிர்வாதாத்மக பிரித் சுற்றுலா குழுவினர், வருடம்தோறும் யாழுக்கு விஜயம் மேற்கொண்டு, பாதிக்கப்பட்டோருக்கான உதவிகளை செய்து வருகின்றனர்.
இதன் அடிப்படையில், இந்த வருடமும் , யாழுக்குச் சென்ற மதகுருமார்களும் நன்கொடையாளர்களுமாக சுமார் 520 பேர் கொண்ட குழுவினர், காங்கேசன்துறை ரயில் நிலையத்தில் வைத்து நன்கொடை பொருள்களை வழங்கிவிட்டு, அங்கிருந்து மாலை 5.15 மணியளவில் மீசாலை நோக்கி ரயிலில் சென்றுக்கொண்டிருக்கும் போது, இனந்தெரியாதவர்களால் கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், வயோதிபர் ஒருவர் காயமடைந்தார்.
இத்தாக்குதலையடுத்து, பளை ரயில் நிலையத்தில் வைத்து ரயில் நிறுத்தப்பட்டு தாக்குதலில் காயமடைந்த வயோதிபர் பளை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு, சிகிச்சையின் பின்னர், மீண்டும் அந்த ரயிலில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டார்.
இது தொடர்பில் வழங்கப்பட்ட தகவலையடுத்து, ஸ்தலத்துக்கு விரைந்த பளை பொலிஸாரும் இராணுவத்தினரும், பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டனர்.
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago