Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
க. அகரன் / 2019 ஜூலை 02 , பி.ப. 04:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் இன்று காலை புகையிரதத்துடன் மோதி 10 மாடுகள் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பிலிருந்து யாழ் நோக்கிச் சென்ற கடுகதி ரயில்; தாண்டிக்குளம் பகுதியில் 10.45 மணியளவில் ரயில் கடவையின் அருகே கூட்டமாக நின்ற மாடுகளே இவ்வாறு குறித்த ரயிலுடன்; மோதி உயிரிழந்துள்ளது.
தாண்டிக்குளம் பிரமண்டு வித்தியாலயத்திற்கு முன்பாக உள்ள பயணிகள் தரிப்பிடப்பகுதிக்கு பின்பாகவுள்ள மாடுகளும் தாண்டிக்குளம் ரயில் நிலையத்திற்கு அருகே ஒரு மாடும் இவ்வாறு ரயிலுடன்; மோதி உயிரிழந்த நிலையில் காணப்படுகின்றது.
கடந்த வாரம் முகமாலை பகுதியில் 21 ஆடுகள் ரயில்க் கடவையில் சென்றபோது ரயிலுடன் மோதி உயிரிழந்துள்ளது தற்போது ஏற்பட்டுள்ள வரட்சியுடனான கால நிலை காரணமாகவே கால் நடைகள் மேய்ச்சல் தரைகளை, தண்ணீரை நாடிச் செல்லும்போது ரயில் கடவையிலுள்ள பயிர்ச் செடிகளை உண்ணுவதற்காகச் சென்றபோது இவ்வாறு உயிரிழந்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago