2025 மே 16, வெள்ளிக்கிழமை

ரஷ்யா பிரஜைக்கு கொரோனா இல்லை

Editorial   / 2020 ஓகஸ்ட் 13 , பி.ப. 01:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

கைதுசெய்யப்பட்ட ரஷ்யா பிரஜைக்கு கொரோனா தொற்று இல்லையென, உறுதி செய்யப்பட்டுள்ளது.

தலைமன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், காலாவதியான விசாவுடன் சட்டவிரோதமாக தங்கியிருந்த ரஷ்யா நாட்டு பிஜை ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுக்கு அமைவாக தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.

இவரது பிசிஆர் பரிசோதனை அறிக்கை, இன்று (13), மன்னார் நீதவான்   மாணிக்கவாசகர் கணேசராஜா முன்னிலையில் சமர்பிக்கப்பட்டது.

அந்த அறிக்கையின் பிரகாரம், அவருக்கு கொரோனா தொற்று இல்லை என தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, ரஷ்யா நாட்டு பிரஜை சார்பாக முன்னிலையாகியிருந்த சட்டத்தரணி எஸ்.டினேசனினால், மிரிகானா ஊடாக அவரை ரஷ்யாவுக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு, மன்றில் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.

இந்தக் கோரிக்கையை ஏற்று, குறித்த  ரஷ்யா நாட்டு பிரஜையை சொந்த நாடான ரஷ்யாவுக்கு   மிரிகானா ஊடாக அனுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு,  நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .