Editorial / 2018 டிசெம்பர் 27 , பி.ப. 05:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.என்.நிபோஜன், மு.தமிழ்ச்செல்வன்

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு முன்பாக இன்று (27) மாலை இரண்டு ரிப்பர் ரக வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் சாரதிகள் உட்பட மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சியிலிருந்து வவுனியா நோக்கி சென்றுகொண்டிருந்த டிப்பர் வாகனமும் வவுனியாவிலிருந்து கிளிநொச்சி நோக்கி சென்று கொண்டிருந்த டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் வீதியில் சென்றுகொண்டிருந்த சிறுமி ஒருவரும் காயமடைந்து கிளிநொச்சி பொதுவைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
1 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago