2025 மே 08, வியாழக்கிழமை

’ரிஷாட் பதியூதீனால் பாதிக்கப்பட்டோர் தொடர்புகொள்ளவும்’

Niroshini   / 2021 ஓகஸ்ட் 16 , பி.ப. 01:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

 

ரிஷாட் பதியூதீன் என்பவர் வன்னி மாவட்டத்தில் உள்ள தமிழ் மக்களின் காணிகளை கொள்ளையடித்த கொள்ளையன் என, புதிய ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் நடராஜா ரவிக்குமார் தெரிவித்தார்.

 

அத்துடன், வன்னியில் இருக்கின்ற மக்கள் ரிஷாட் பதியூதீனால் பாதிக்கப்பட்டிருந்தால், தங்களை தொடர்பு கொள்ளுமாறும், அவர் கேட்டுக்கொண்டார்.

கிளிநொச்சி ஊடக மையத்தில், நேற்று  (15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்தரைத்த பொதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், ரிஷாட் பதியூதீனின் சகோதரன் ரிவ்கானும் தமிழ் மக்களை அடக்கு ஒடுக்கி வாழ்ந்த வரலாறு இருக்கின்றதெனத் தெரிவித்த அவர். வன்னி மண் தமது மண் எனவும் தமிழ் மண்ணை இனியும் உங்களுக்கு தாரைவார்த்து கொடுக்க முடியாதெனறும் கூறினார்.

வன்னியில் ரிஷாட் பதியூதீனால் மக்கள் ஒடுக்கப்பட்டிருந்தால், அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தயாராக இருப்பதாகத் தெரிவித்த அவர், வன்னியில் இருக்கின்ற மக்கள் ரிஷாட் பதியூதீனால் பாதிக்கப்பட்டிருந்தால் தொடர்பு கொள்ளுமாறும் அதற்கான தீர்வைப் பெற்றுத்தருவோம் என்றும் கூறினார்.

இதேவேளை, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீதசேகர புர்க்காவை தடை செய்வது தொடர்பில் அமைச்சரவையில் சமர்ப்பித்து, அதனை தடை செய்ய வேண்டுமெனத் தெரிவித்த அவர், இங்கு புர்காவை அணிந்து கொண்டு பலர் பாரிய துஷ்பிரயோகங்களில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றார்கள் என்றும் சாடினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X