Editorial / 2017 நவம்பர் 15 , பி.ப. 04:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
துன்னாலை - குசவப்பிட்டி பகுதியில் உள்ள சலூன் ஒன்றுக்குச் சென்று தகராறில் ஈடுபட்டதுடன், அங்கிருந்த பொருட்களை அடித்துடைத்து சேதம் விளைவித்த இளைஞனை, எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு, பருத்தித்துறை நீதவான் நளினி கந்தசாமி நேற்று (14) உத்தரவிட்டார்.
குறித்த இளைஞன் சலூனுக்குச் சென்று, 50 ரூபாயைக் கொடுத்து முடிவெட்டுமாறு கூறியுள்ளார். இதற்கு கடை உரிமையாளர், தலைமுடி வெட்டுவதற்காக சங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கே வெட்டமுடியும் என பதிலளித்துள்ளார்.
இதனால் கோபமடைந்த இளைஞன், அங்கிருந்த பொருட்களை அடித்துடைத்து சேதம் விளைவித்துள்ளார். இதையடுத்து, குறித்த இளைஞன் திங்கட்கிழமை (13) கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
17 minute ago
36 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
36 minute ago
52 minute ago