2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

‘ரெஜினோல் கூரேயே ஆளுநராக வேண்டும்’

Editorial   / 2019 ஜனவரி 01 , பி.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.தமிழ்ச்செல்வன், சுப்பிரமணியம் பாஸ்கரன்   

ரெஜினோல் கூரேயே ஆளுநராக வேண்டும் எனத் தெரிவித்து இன்று (01) கிளிநொச்சியில்  கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி புகையிரத நிலையத்தில் ஆளுநரின் கோரிக்கைக்கு அமைவாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட  மக்களுக்கான உலருணவுப் பொருட்களை ஏற்றிய ரயில் வருகை தந்த நேரத்தில் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

வடமாகாண தொண்டராசிரியர்கள், முன்பள்ளி ஆசிரியர்கள், சுகாதார தொண்டர்கள் என பலர் ஒன்று சேர்ந்து கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

இதன் போது மீண்டும் றெஜினோல்ட் கூரே வடக்கு மாகாணத்துக்கு ஆளுநராக  வேண்டும் என்றக் கோரிக்கை அடங்கிய ஜனாதிபதிக்கான மனுவை மாவட்டச் செயலர் சுந்தரம் அருமைநாயகத்திடம் கவனயீர்ப்பில் ஈடுப்பட்டவர்கள் கையளித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .