Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2021 டிசெம்பர் 21 , பி.ப. 02:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கீதாஞ்சன்
வடக்கு - கிழக்கு மாகாணங்களை எடுத்துக்கொண்டால் சிறுவர்கள் பாடசாலைக்குச் செல்வது குறைந்த தொகையாக காணப்படுகின்றது என, பெண்கள் மற்றும் குழந்தைகள் அபிவிருத்தி, பாலர் மற்றும் ஆரம்பக் கல்வி, பாடசாலை உட்கட்டமைப்பு மற்றும் கல்விச் சேவைகள் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த டி சில்வா தெரிவித்தார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் சிறுவர்கள் பெண்கள், பாதுகாப்பு தொடர்பான இராஜாங்க அமைச்சரின் முக்கிய சந்திப்பு ஒன்று, முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தில், நேற்று (20) நடைபெற்றது. இதன் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர், சிறுவர் துன்புறுத்தல் சிறுவர்களுக்கான பாலியல் தொந்தரவுகள் சம்பந்தமாகவும் கருத்தடை செய்தல் பல வருடங்களுக்கு பின்பு மோசமான முறையில் வன்முறைகள் இடம் பெற்று வளர்ந்து கொண்டே வருகின்றன என்றார்.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் அடிமட்டத்தில் இருந்து பிரதேச செயலக பிரிவுகள் மாவட்ட செயலக பிரிவுகள் ஊடாக கலந்தாலோசித்து, இது சம்பந்தமாக நடவடிக்கை மேற்கொள்ளவும் விசாரணைகள் மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளோம் எனவும், அவர் கூறினார்.
இந்த மாவட்டத்திலே 13 வயது சிறுமிக்கு வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது எனவும், இது சம்பந்தமாக விசேடமான கலந்துரையாடல் ஒன்றையும் இன்று மேற்கொண்டோம் எனவும், அவர் தெரிவித்தார்.
'அதேபோன்று, சட்டரீதியற்ற போதைப்பொருள் போதைவஸ்து பாவனை இதன் மூலமாக சிறுவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு சம்பந்தமாகவும் கலந்துரையாடினோம்.
'இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுவதற்கு பிரதான காரணம் தான.; இந்தப் போதைப்பொருள், போதைவஸ்து பாவனை இது சம்பந்தமாக உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
'இவ்வாறான சிறுவர்கள் வன்கொடுமைகள் போதைப்பொருள் பாவனைக்கு எதிராக கடுமையான தண்டனை சட்டத்தின் கீழ் வழங்குவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என தீர்மானித்தோம்' எனவும், அவர் தெரிவித்hர்.
வடக்கு - கிழக்கு மாகாணங்களை எடுத்துக்கொண்டால் சிறுவர்கள் பாடசாலைக்குச் செல்வது குறைந்த தொகையாக காணப்படுகின்றது எனத் தெரிவித்த அவர், சிறுவர்களை பாடசாலைக்கு அனுப்புவது சம்பந்தமாகவும் குழு ஒன்றை உருவாக்கி இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தீர்மானித்தோம் எனவும் கூறினார்.
18 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
1 hours ago