Editorial / 2019 பெப்ரவரி 17 , பி.ப. 03:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
- செ.கீதாஞ்சன்
வடக்கு மாகாணம் தெற்கு மாகாணத்தின் கொல்லைப்புறம் அல்லவெனத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வடக்கு மாகாணத்துக்கு புதிய உயிரை கொடுக்கவேண்டுமெனவும் குறிப்பிட்டார்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் அபிவிருத்திகள் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடலொன்று, முல்லைத்தீவு மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில், நேற்று (16) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே, பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர், வடக்கு மாகாணத்துக்கு பொருளாதார சக்தியை கொடுக்க வேண்டுமெனவும் அதற்காகவே, தாங்கள் இங்கு வருகை தந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
பலாலி விமான நிலையத்தை விரிவுபடுத்த முயற்சிப்பதாகத் தெரிவித்த அவர், இந்திய அரசாங்கத்துடன் இணைந்து காங்கேசன் துறைமுகத்தையும் அபிவிருத்தி செய்வுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இதற்கமைய, காங்கேசன் துறைமுகத்தில் இருந்து இந்தியாவுக்கு படகு சேவையினை ஆரம்பித்து தலைமைன்னாரில் இருந்தும் இந்தியாவில் இருந்தும் ஏற்றுமதி, இறக்குமதி நடவடிக்கையை தொடங்கவுள்ளதாக, அவர் மேலும் கூறினார்.
5 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago