2026 மே 07, வியாழக்கிழமை

dd

வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரன் கைது

சண்முகம் தவசீலன்   / 2018 பெப்ரவரி 28 , மு.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கு மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் சற்றுமுன் முல்லைத்தீவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வட்டுவாகல் பகுதியில் கடந்த 22 ஆம் திகதி இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பில், வடக்கு மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் மற்றும் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைக்கபட்டிருந்தனர்.

இந்நிலையில், ரவிகரன் இன்று (28) முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்துக்குச் சென்றிருந்தார்.

இதன் பிரகாரம் அவரிடம் விசாரணைகளை மேற்கொண்ட முல்லைத்தீவு பொலிஸார் அவரை கைது செய்துள்ளதுடன், முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .